ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு அடித்த அதிஷ்டம்
இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.
கதிர்காமம் - கொச்சிபத்தான பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு இவ்வாறு அதிஷ்டம் அடித்துள்ளது.
கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் மூன்று வர்த்தகர்களுக்கே, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.
ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை

கதிர்காமம்-கொச்சிபத்தான பகுதியில் அண்மைக் காலமாக, இரத்தினக்கல் தோண்டும் பணிகள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில், மூன்று பேருக்கு 5 இரத்தினக்கற்கள் கிடைத்ததை அடுத்து, அந்த இடத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவருக்கும் கிடைத்த 5 இரத்தினக்கற்களும், எலஹர பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு, சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri