நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 45 மனுக்கள் தாக்கல்!
இலங்கையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் 11 மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்கு கிடைக்கபெற்றுள்ளன என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
45 மனுக்கள்
இதேவேளை, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது என்று சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தியுள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்றக் குழுநிலை கூட்டத்தின்போது முன்வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam