பொலிஸ்மா அதிபரை நீக்கிய அரசமைப்பு: ரணிலின் அதிரடி நடவடிக்கை
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசமைப்பு சபை நேற்று எடுத்த முடிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியமைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில், பொலிஸ்மா அதிபரை மீண்டும் நியமிப்பது தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உத்தரவுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனாவின் பீஜிங்கிலிருந்து உடனடியாக வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியும், டிரான் அலஸும் இலங்கையில் இல்லாதபோது, பொலிஸ்மா அதிபரை அரசமைப்பு சபை நீக்கியது பாரிய தவறு என அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் பதவி நீக்கம்
தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பொலிஸ்மா அதிபரின் பதவி நீக்கம் சதித்திட்டமா என சந்தேகம் நிலவுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி இலங்கைக்கு வருவதற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல்காரரைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை உடனடியாகக் கண்டறியவுள்ளதாக குறித்த அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியும் பொலிஸிற்குப் பொறுப்பான மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் நாட்டில் இல்லாத வேளையில் பொலிஸ்மா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது நாட்டிலுள்ள முழுப் பொலிஸ் திணைக்களத்தையும் முடக்குவதற்குச் சமமானது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
you may like this





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
