அநுராதபுரம் வயோதிபர் இல்லத்தில் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
அநுராதபுரம் - சாலியபுர பிரதேசத்தில் அரசால் நடத்திச் செல்லப்படும் வயோதிபர் இல்லத்தில் 44 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வயோதிபர் இல்லத்தில் 298 வயோதிபர்கள் உள்ளனர். அவர்களில் மூவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
இதையடுத்து ஏனைய வயோதிபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் 41 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான 41 பேரில் 21 பேர் அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலை மற்றும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் வயோதிபர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.



