42 ஆயிரம் பேரை கைது செய்யுமாறு உத்தரவு
நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பணிப்புரை
சந்தேகநபர்களில், 35,505 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேகநபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேகநபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.
நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 18 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
