ஒரே நாளில் நாடெங்கும் 402 சந்தேகநபர்கள் கைது!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொலிசாரின் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய 402 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியதாக வலய மட்டத்திலான பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கை
இதற்கமைய, இன்று(30.6.2026) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 27,713 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாடாளாவிய ரீதியில் 402 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட மேலும் பலர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan