இரண்டு குழுக்களிடையில் சண்டை! நால்வருக்கு விளக்கமறியலில்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களிடையில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஐந்தாம் வட்டாரம், திரியாய், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 18, 20, 21 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குச்சவெளி பிரதேசத்தில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக இருந்து வந்த பகைமை நிலை, வாய்த்தர்க்கங்கள் கைகலப்பாக மாறியதில் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவங்களுடன் தொடர்புடைய இரு குழுவிலும் இருந்து நால்வரைக் கைது செய்து சந்தேக நபர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam