4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்து

Vavuniya Northern Province of Sri Lanka Srilanka Bus
By Thileepan Apr 30, 2026 07:03 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பேருந்து நிலையத்தில் குறித்த தனியார் பேருந்துகள் தமக்குரிய சுழற்சி முறை இருந்தும், அதிகார சபைக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றித் தமது சேவையைத் தன்னிச்சையாக இடைநிறுத்தியுள்ளன.

அநுரவின் அழைப்பை ஏற்ற எரான்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உடனடி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு..

அநுரவின் அழைப்பை ஏற்ற எரான்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உடனடி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு..

தடை நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில்

இதனால், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெருமளவான பயணிகள் ஒரு நாள் முழுவதும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், அதிக கட்டணங்களைச் செலுத்தி மாற்றுத் தனியார் வாகனங்களில் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்து | 4 Private Buses Operating Permits Cancelled

பயணிகளை நடுத்தெருவில் விட்ட இந்தப் பொறுப்பற்ற செயல் தொடர்பில் அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகப் பின்வரும் கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக குறித்த பேருந்து உரிமையாளர்களுக்கு தலா 3,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரங்கள் 27.04.2026 முதல் 03.05.2026 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தடை நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில், குறித்த பேருந்துகளில் பதிவு செய்யப்பட்ட சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் வழியனுமதிப்பத்திரம் பெற்று சேவையில் ஈடுபடும் வேறு எந்தவொரு பேருந்திலும் கடமையாற்றுவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கைகள்

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் : 'பயணிகளின் நலனே எமது முதன்மை நோக்கமாகும்.

4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்து | 4 Private Buses Operating Permits Cancelled

தமக்கு வழங்கப்பட்டுள்ள சுழற்சி முறையில் பொறுப்பற்ற விதத்தில் சேவைகளை இடைநிறுத்தி பொதுமக்களை அலைக்கழிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அதிகார சபை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.

இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்விதப் பாரபட்சமுமின்றித் தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் வேண்டுமென்றே ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது முறைகேடுகள் இடம்பெற்றாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரம் : நிதி அமைச்சின் செயலாளருக்கு எச்சரிக்கை

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரம் : நிதி அமைச்சின் செயலாளருக்கு எச்சரிக்கை

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US