கேரள கஞ்சாவுடன் மதுவரித் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது
நீர்கொழும்பு (Negombo) மற்றும் சிலாபம் (Chilaw) பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மதுவரித் திணைக்களத்தின் 04 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பயணித்த மதுவரித் திணைக்களத்திற்கு சொந்தமான வான் ஒன்றும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்களை எதிர்த்து யுக்திய அல்லது நீதி என்ற படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு மத்தியிலேயே போதைப்பொருளை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளும் அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
