வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் நியமனம்
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி செயற்பட்டுவரும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் (Mannar) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பி.கே.விக்கிரமசிங்கவும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சுபாஸ்கரனும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வினோதனும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக உமாசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வவுனியா (Vavuniya) மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராக ஜி.சுகுணணும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராக எம்.எச்.எம்.அசாத்தும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் பி.எஸ்.என்.விமலரட்ணவும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராக வீரக்கோனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக முன்னர் கடைமையாற்றி இடமாற்றப்பட்ட திலீப் லியனகே அனுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நியமனம் வழங்கப்பட்டவர்கள் விரைவில் கடமைகளை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்படுகிறது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
