ஒரு மாதத்தில் 4 பாரிய கொள்ளை சம்பவங்கள்: அச்சத்தில் மக்கள்
அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள தமிழ் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் 4 வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களை அடுத்து பிரதேசத்தில் மக்கள் அச்சத்தில் இரவுப்பொழுதைக் கழித்துவருகின்றனர்.
அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீட்டின் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நீதவானை தாக்கிவிட்டு அவரின் மனைவியின் 11 பவுண் தாலிக்கொடியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
நீதவான் ஒருவரின் வீடு உட்பட ஒரு மாத்தில் 4 வீடுகளில் நள்ளிரவில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
யன்னல் வழியாகக் கொள்ளையர்கள் இறங்கி உறங்கிக்கொண்டிருந்த பெண்களின் கழுத்திலிருந்த சுமார் 30 பவுண் நிறை கொண்ட தாலிக்கொடிகளை அறுத்தெடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் வெள்ளிக்கிழமை இரவுகளில் இடம்பெற்றுள்ளதுடன், கொள்ளையர்கள் தமது ஆள் அடையாளம் தெரியாதவாறு மிகவும் திட்டமிட்டு இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கொள்ளையர்கள் எவரையும் கைது செய்யவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடர் கொள்ளைச் சம்பவங்களினால் தமிழ் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் தமது
இரவுப் பொழுதினை மிகவும் அச்சத்துடன் கழித்து வருகின்றனர்.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
