ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 4 பேர் பலி: உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் அறிவிப்பு
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ட்ரோன்கள் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு, ஈரானால் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் - 136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது.
ஷெல் தாக்குதல்
இதன் ஒரு பகுதியாக ஈரான் இராணுவ தலைமையுடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்தியதில் உக்ரைனில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது.
மேலும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோரெட்ஸ்க் நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகரத்திற்குள் 2 பேர் இறந்ததாகவும், அதன் அருகில் உள்ள நகரமான பிவ்னிச்னேவில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிடம் பகிர்ந்துகொள்ளப்படும் ஆதாரங்கள்: கனடா - இந்தியா தொடர்பில் அச்சம் வெளியிடும் மேற்குலகம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |