அம்பாறையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 4 வீடுகள் சேதம்
அம்பாறையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 4 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏம். ஏ. முகமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (25.12.2022) அதிகாலையளவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக நேற்று (24.12.2022) பாரிய இடி மின்னல் காற்றுடன் கடும் மழை பெய்து வருகின்றது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள சேதம்
எனவே கடும் காற்றினால் பதியத்தலாவை பிரதேசத்திலுள்ள இரு வீடுகளும் உகண பிரதேசத்திலுள்ள இரு வீடுகள் உட்பட 4 வீடுகளின் கூரை தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி
நிற்பதுடன் குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
