நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்தியர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நான்கு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள், படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நான்கு கடற்றொழிலாளர்களையும், கைது செய்த கடற்படையினர், அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர்.
அதேவேளை, அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

காவேரியை சுக்கு நூறாக உடைக்கும் விஷயத்தை தந்திரமாக செய்த பசுபதி, எப்படி சமாளிக்கப்போகிறார்... மகாநதி சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
