உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான நேற்று காலை வாகரை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி பி.பி.அமில தலைமையிலான குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் 4 மீட்டதுடன் 32, 48, 28, 42 வயதுடைய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வன விலங்குகளை இறைச்சிக்காக துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி வருபவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri