மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது நிறைவு நினைவேந்தல்
கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம் 28/01/2926 நடைபெற்றது.
மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை படுகொலை
இதன்போது, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

28/01/1987 மற்றும் 12/06/1991 ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இறால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.
குறித்த படுகொலையில், சிறுவர்கள்,பெண்கள் மற்றும் முதியவுர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை நினைவு கூரும் வண்ணமே, கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2,000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால்
1987ஆம் ஆண்டு இதே தினத்தில் 39ஆண்டுகளுக்கு முன்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு என்று கூறுகின்ற மகிழடித்தீவு, முதலைக்குடா இறால் வளர்ப்ப பண்ணை, படுவான்கரை பெரு நிலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையில் 157க்கும் அதிகமானவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.

1987ஆம் ஆண்டு என்பது கிழக்கு மாகாணத்தில் இந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரியளவிலான படுகொலை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்திய- இலங்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் பின்னர் படுகொலைகள் முள்ளிவாய்க்கால் வரையில் இடம்பெற்றது.
கொக்கட்டிச்சோலை படுகொலையென்பது அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநினைவேந்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,பட்டிப்பளை பிரதேச தவிசாளர்,படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.





நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam