4620 லீட்டர் டீசலுடன் ஒருவர் கைது! பொலிஸார் தீவிர விசாரணை
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீடொன்றுடன் இணைந்த களஞ்சியசாலையில் பதுக்கி வைத்திருந்த டீசல் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று (06.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
4620 லீட்டர் டீசல் எரிபொருள் மீட்பு
அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி அவர்களின் வழிகாட்டலில், அப்பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்களான கே.எல்.எம். முஸ்தபா மற்றும் அனுர குமார தலைமையிலான பொலிஸார் குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அங்கு 22 பரல்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 17 இலட்சத்து 64,840 ரூபாய் பெறுமதியான சுமார் 4,620,000 மில்லி லீட்டர் டீசல் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri