சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட 39 ட்ரோன்கள்! நளின் பண்டார ஜயமஹ எம்.பியிடம் விசாரணை
சிங்கப்பூரிலிருந்து இலங்கை திரும்பிய, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹவினால் கொண்டுவரப்பட்ட 39 ட்ரோன்களை இலங்கை சுங்கத்துறை தடுத்து வைத்துள்ளது.
தேவையான அனுமதிப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவையான அனுமதிகள்
இந்த நிலையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRC) மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற்று சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான அனுமதிகள் கிடைக்கும் வரை 39 ட்ரோன்களும் சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.