நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் 07 பகுதியில் 3 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் எனக் கூறப்படும் போதைப்பொருளுடன் 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று (29.09.2026) காலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் 07 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கைப்பற்றல்
கைது நடவடிக்கையின்போது குறித்த நபரிடமிருந்து 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri