இந்திய பொலிஸாரிடம் சிக்கிய 38 இலங்கையர்கள்
பெங்களூரின் மங்களூரு நகரின் விடுதிகளில் சிறு குழுக்களாக, ஒரு மாதத்திற்கும் மேலாக, கடவுச்சீட்டுகள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கை நாட்டினரை மங்களூரு நகர காவல்துறையினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
நகர காவல்துறை ஆணையர் என் சஷி குமார், இன்று செய்தியாளர்களிடம் இது தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலானோர் இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
39 இலங்கையர்கள் நகரத்தில் இருப்பதாக தமிழகத்தின் உளவுத்துறை வழங்கிய தகவலுக்கு அமையவே மங்களூரு காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர்.
கனடாவில் வேலைப் பெற்று தருவதாக உறுதியளித்த ஒரு முகவருக்கு, இந்த இலங்கையர்கள் 5முதல் 10 லட்சம் ரூபா வரை செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கு இவர்கள் 2021 மார்ச் 17 ம் திகதி வந்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து கனடாவுக்கு கொள்கலன் கப்பல்கள் அல்லது சரக்குக் கப்பல்கள் அல்லது தனியார் படகுகளில் புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலிருந்து இந்த முகவர்கள் வழியாகச் சென்றவர்களை பற்றி அறிந்தே இவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் மதுரை மற்றும் சேலத்தில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்தனர்.
தமிழகத்
தேர்தல் காலத்தில் சோதனைகளை தீவிரப்படுத்தியதால், அவர்கள் பெங்களூரு
சாந்திநகருக்கு மாற்றப்பட்டனர். சிறிய குழுக்களாக, அவர்கள் மங்களூரு
வந்தடைந்தனர். அவர்கள் நகரத்தில் மீனவர்கள் அல்லது தொழிலாளர்களாக வேலை செய்து
கொண்டிருந்ததாக காவல்துறை அதிகாரி சஷி குமார் கூறினார்.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri