1990ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
1990ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முதன்முறையாக முல்லைத்தீவில் நினைவுகூரப்பட்டது.
1990ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட துயரச் சம்பவத்தின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (31.10.2026) முல்லைத்தீவு, ஹிஜ்ராபுரத்தில் இளைஞர்களின் ஏற்பாட்டில் முதன்முறையாக நினைவுகூரப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள்
இந்நிகழ்வின்போது, 1990ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகள், அனுபவங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட துயரங்கள் நினைவுகூரப்பட்டன.

அத்துடன், வெளியேற்றம் இடம்பெற்று 36 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்றுவரை எதிர்கொண்டு வரும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் றிஸாம் ஜமால்தீன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான ஐனியப்பிள்ளை அபூபக்கர், பிர்தொஸ் ஜெனுபா ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
துயரச் சம்பவம்
இதன்போது, வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளத்தில் முகாம்களில் வாழும் மக்களைத் திட்டமிட்ட முறையில் மீள்குடியேற்றுவதன் அவசியம், அவர்களுக்கான இழப்பீடு, அவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் தமிழ்–முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், 1990ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது, தங்களால் இயன்ற உதவிகளையும் வளங்களையும் பகிர்ந்துகொண்டு, துயரத்தில் துணைநின்ற புத்தளம் வாழ் சமூகத்தினருக்கு முல்லைத்தீவு மக்கள் சார்பாக இந்நிகழ்வில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மறக்க முடியாததும், மறுக்க முடியாததுமான இவ்வரலாற்றுத் துயரச் சம்பவத்தை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் வரலாறு, உரிமைகள் மற்றும் அனுபவங்களை ஆவணப்படுத்தி, அவர்களுக்கான நீதியையும் உரிமைகளையும் வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்நினைவேந்தல் நிகழ்வு எடுத்துரைத்தது.
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam