சாவகச்சேரி படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் (Photos)
சாவகச்சேரி படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பொதுச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.10.2023) மாலை இடம்பெற்றது.
இதன்போது 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியை அண்மித்து இந்திய விமானப்படையின் மிலேச்சத்தனமான தாக்குதலில் பலியான 68பொதுமக்களுக்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்த பொதுமக்களின் உறவுகள்
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் வீ.விஜயேந்திரன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், உயிரிழந்த பொதுமக்களின் உறவுகள், பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கந்தசஷ்டி விரத இறுதி நாளில் சூரன் தாங்கிய ஊர்தியை இலக்கு வைத்து இந்திய விமான படையின் இரண்டு உலங்குவானூர்திகள் நடத்திய தாக்குதலில் 68 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 175 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூடுபிடிக்கு தமிழ் அரசியல் களம்..! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை

இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு




