மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானன் இனப்படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று(9) இடம்பெற்றுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு செட்டெம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி போன்ற பிரதேசங்களை இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல்படையினர் சுற்றிவளைத்து அங்கிருந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 186 பேரை போயிஸ் ரவுண் இராணுவமுகாம் பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை வெட்டியும் துப்பாக்கியால் சட்டும் படுகொலை செய்து ரயர்கள் போட்டு எரித்தனர்.
இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியை
இவ்வாறு படுகொலை செய்யப்பட்வர்களின் நினைவேந்தல் நினைவு தூபியில் இடம்பெற்றது.
அதில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து 4 கிராமங்களை சேர்ந்த 4 பேர் ஒன்றிணைந்து பொது சுடர் ஏற்றியதையடுத்து அங்கிருந்த அனைவரம் சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பினனர் படுகொலை செய்யப்பட்ட இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியை அகழ்வு பணி முன்னெடுக்குமாறும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
