உடனடியாகக் குறைக்கப்பட்டுள்ள 350 வகையான மருந்துகளின் விலைகள்..
350 வகையான மருந்துகளின் விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் துறையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளின் விலைகள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதன்படி, அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும் 350 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவால் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாகவும், பின்னர் மருந்துகளின் விலைகள் அறிவிக்கப்பட்டதாகவும் நிபுணர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.