திருமலையில் புத்தரின் பின்னாலுள்ள அரசியல் - தென்னிலங்கையில் வலுவான சக்தி
திருகோணமலையில் திட்டமிட்ட வகையில் கடற்கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையின் பின்னணியில் தென்னிலங்கையை சேர்ந்த பலமான சக்தி உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நேற்று ஆரம்பமான புத்தர் விவகாரம் இன ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் பௌத்த துறவிகளுக்கு அடிபணிந்துள்ள சமகால அரசாங்கம் சர்ச்சைக்குரிய இடத்தில் புத்தர் சிலையை வைக்க அனுமதி வழங்கியுள்ளது.
புத்தர் சிலை
பொலிஸ் பாதுகாப்புடன் திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதன்போது பெருமளவு சிங்களவர்களும் ஆதரவாக திரண்டு புத்தரை வைக்க வழிவகை செய்துள்ளனர்.

கடந்த ஒரு வருடகாலமாக சுமூகமாக அரசாங்கத்தின் செயற்பாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென இவ்வாறான சர்ச்சை ஏற்படுத்தப்பட்டதன் பின்னணில் பெரும் சக்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் சிங்களவர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று ஆட்சியில் இருந்த தரப்பினரால் திட்டமிட்ட வகையில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகு்கள் எழுந்துள்ளன.
பாரிய போராட்டம்
எதிர்வரும் 21ஆம் திகதி சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயார்படுத்தல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறானதொரு நிலையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னின்று செயற்படுத்தி வருகின்றார்.
அண்மைக்காலமாக தங்காலையில் ஓய்வு எடுத்து வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பெருமளவான பௌத்த துறவிகள் நேரில் சென்று சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.