இலங்கையர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாணின் விலை
ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர் நட்டம்

மேலும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், பாண் விற்பனையில் தொடர்ச்சியாக நட்டம் ஏற்படுவதாகவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மீனின் விலை குறையலாம்..

இதேவேளை, எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam