ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க பிரித்தானியா தலைமையில் 35 நாடுகள் ஆலோசனை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் முடக்கப்பட்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க, பிரித்தானியா இன்று (2,) சுமார் 35 நாடுகளுடன் அவசர இணையவழி மாநாட்டை நடத்தவுள்ளது.
பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இந்தத் தகவலை வெளியிட்டார். பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யவெட் கூப்பர் (Yvette Cooper) இந்த விவாதங்களை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
கடற்பயண சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான அனைத்து இராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்தல்.
அங்கு சிக்கியுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

உலகளாவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களின் நகர்வை மீண்டும் தொடங்குதல். போர் நிறுத்தப்பட்ட பிறகு, ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பானதாக்க இராணுவத் திட்டமிடுபவர்களைத் திரட்டுவது குறித்து ஆலோசித்தல்.
இந்த ஆலோசனையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவுள்ளன.
அமைதி நிலவும் காலங்களில், உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தொடங்கிய போரைத் தொடர்ந்து, ஈரான் இந்த நீரிணையை மூடியுள்ளது.
ஈரானிய ஆக்கிரமிப்பிலிருந்து இறுதியாக விடுபடும் நாள்! போரின் நிறைவு தருவாயில் அமெரிக்கா.. சற்றுமுன்னர் ட்ரம்பின் அறிவிப்பு
எரிவாயு விலைகள்
இதனால் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
"இந்த நீரிணையை மீண்டும் திறப்பது எளிதான காரியமல்ல என்பதை நான் மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும்" என ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ அமைப்பை ஒரு "காகிதப்புலி" (Paper Tiger) என விமர்சித்ததோடு, அமெரிக்கா அந்த அமைப்பில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ஸ்டார்மர் "நேட்டோ என்பது உலகம் கண்ட மிகச்சிறந்த மற்றும் பயனுள்ள இராணுவக் கூட்டணியாகும். இது பல தசாப்தங்களாக நம்மைப் பாதுகாப்பாக வைத்துள்ளது.
நேட்டோ மீதான எமது அர்ப்பணிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை." என கூறினார்.
எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நாடுகள் ஹார்முஸ் நீரிணையில் இருந்து "தங்கள் சொந்த எண்ணெயை தாங்களே பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றும், அமெரிக்கா அதற்கு உதவாது என்றும் ட்ரம்ப் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam