குறிவைக்கப்பட்ட ஈரானின் மூத்த அதிகாரி! அயத்துல்லா அலி கமேனிக்கு நெருக்கமான தலைமை
ஈரான் அரசியல் அமைப்பில் சீர்திருத்தவாதியாக கருதப்படும் மூத்த அதிகாரி கமால் கராசி (Kamal Kharrazi), டெஹ்ரானில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் கடுமையாக காயமடைந்துள்ளார் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவரது மனைவி இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஈரான் தலைமை
முன்னாள் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய கராசி, முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
போரின் தொடக்க மணித்துளிகளிலேயே கமேனி கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), தற்போதைய ஈரான் தலைமையை “மிகவும் நியாயமானது” என தொடர்ந்து விவரித்து வருகிறார்.
இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள், குறிப்பாக சீர்திருத்தவாதி என கருதப்படும் கராசி குறிவைக்கப்பட்டதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 2 மணி நேரம் முன்
நீதிமன்றத்தில் தடுமாறிய ஈஸ்வரி, அதிரடி காட்டிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam