சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி (Photos)
மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 186 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 33 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வு சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்றைய தினம் (09.09.2023) ஈகைசுடர் ஏற்றி எழுச்சி பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நினைவஞ்சலி
கடந்த 1990ஆம் ஆண்டு சத்துருக்கொண்டான் பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை இராணுவம் சுற்றிவளைத்து அங்கு வீடுகளில் இருந்த பெண்கள் ஆண்கள் உட்பட 186 பேரை கூட்டத்துக்கு என அழைத்துச் சென்று அவர்களை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.
இப்படுகொலையின் 33ஆவது நினைவஞ்சலி பிரதேச பொதுமக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறுவினர்கள், அரசியல்வாதிகள், கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்வர்களுக்காக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்த அமைச்சர்கள்: வியாழேந்திரன் குற்றச்சாட்டு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








