உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்த அமைச்சர்கள்: வியாழேந்திரன் குற்றச்சாட்டு (Video)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியல்வாதிகளால் திட்டமிடப்பட்ட ஒரு செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்,
சனல் 4 தொடர்பான விடயம் ஒன்று நாட்டிலே தற்போது பரவலாக பேசப்படுகின்ற நிலையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இந்த நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கின சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு 500க்கும் மேற்பட்டோர் பல வடுக்களோடு கை இல்லாமல், கால் இல்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் சோகத்திற்குள்ளாகின சம்பவங்களின் பின் அரசியல்வாதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான முழுமையான விடயங்கள் கீழ்வரும் காணொளியில் பதிவாகியுள்ளது.

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri
