ரஷ்யாவிற்கு போருக்கு சென்ற 330 முன்னாள் படைவீரர்கள் மாயம்
ரஷ்ய – உக்ரைன் போரில் இணைந்து கொண்ட முன்னாள் படையினரில் 330 பேரை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய, உக்ரைன் போரில் பாதுகாப்பு முன்னரங்கில் போரில் ஈடுபட்டு வரும் முன்னாள் படையினரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போரில் ஈடுபட்டுள்ள முன்னாள் படையினரின் குடும்பங்களிடம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை
தங்களை மீளவும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் படைவீரர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கோரியுள்ளதாக கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் படையினரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |