இலங்கை வரலாற்றில் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு: தடுமாறும் பொருளாதாரம்
இலங்கையில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த பத்து வருடங்களில் 51150 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாட்டின் வரலாற்றில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாகவும், அது 34000 மெற்றிக் தொன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேயிலை உற்பத்தி 2015 இல் 328800 மெற்றிக் தொன்களாலும், 2020 இல் 278489 மெற்றிக் தொன்களாலும், 2023 இல் 256039 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் பல இலட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: விண்ணப்பிக்க மேலும் வாய்ப்பு

தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி
எமது ஏற்றுமதி 2013 இல் 319700 மெற்றிக் தொன்களாலும், 2015 இல் 306900 மெற்றிக் தொன்களாலும், 2020 இல் 265569 மெற்றிக் தொன்களாலும், 2023 இல் 241912 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியினால் ஏற்படும் இழப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் 75 வீதத்திற்கு சமம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது தேயிலை ஏற்றுமதி 24 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri