X தளத்திற்கு விதிக்கப்பட்ட 120 மில்லியன் யூரோ அபராதம் : ஆதரவாக களமிறங்கிய அமெரிக்க அரசு
X (முன்பு ட்விட்டர்) தளத்தில் புளூ டிக் கணக்குகள் பயனர்களை ஏமாற்றுவதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 120 மில்லியன் யூரோ அபராதத்தை எதிர்த்து ஈலோன் மஸ்க் தொடர்ந்த வழக்கில் அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த 2025 டிசம்பரில், X தளத்தில் பணம் செலுத்தி பெறும் புளூ டிக் (Blue Tick) கணக்குகளின் உண்மைத்தன்மை முறையாக சரிபார்க்கப்படாமல் பயனர்களை ஏமாற்றுவதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
பயனர்களின் உரிமைகளைப் பாதுகாக்க
மேலும், விளம்பரங்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக தராதது மற்றும் ஆய்வாளர்களுக்கு தரவுகளை மறுத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் X தளம் மீது சுமத்தப்பட்டன.

இந்தநிலையில் சர்வதேச சட்ட எல்லைகளை மீறி அமெரிக்க நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்படுத்த முயல்வதாகவும், இது அமெரிக்க தொழில் நுட்பத் துறையைப் பாதிக்கும் என்றும் அமெரிக்க நீதித்திணைக்களம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இருப்பினும், பயனர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தங்களின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) நடைமுறைப்படுத்தவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளத் தயார் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் பதிலளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு : மறைக்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய தகவல்களை அம்பலப்படுத்தும் புலனாய்வாளர்....