முல்லைத்தீவில் படுகொலைச் செய்யப்பட்ட 33 உறவுகளின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை ராணுவத்தின் விமான தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களினால் படுகொலை செய்யப்பட்ட 33 மக்களுடைய 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(10.06.2026) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில், நிரோஜன் விளையாட்டுக்கழக மைதானத்தில் தலைவர் சஜந்தன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உயிரிழந்தவர்களின் உறவினர்களால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன், மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், உறவுகளை இழந்தவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.






1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 12 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan