323 கொள்கலன் சர்ச்சை: மேலும் ஆய்வுக்கு அழைப்பு
கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு நாட்களில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதை விசாரிக்க நியமிக்கப்பட்ட அரசாங்கக் குழு, 'சிவப்பு முத்திரை' என்று குறிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில், மேலும் ஆய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன், ஆய்வு இல்லாமல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட வேண்டிய பல அவசர பரிந்துரைகளை, அந்த குழு வழங்கியுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார், நான்கு மாதங்கள் நீடித்த விசாரணைக்கு பிறகு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைப்பதற்காக, குழுவின் அறிக்கை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாய சுங்க ஆய்வு
2021இற்கு முன்னர், 'சிவப்பு' என்று பெயரிடப்பட்ட கொள்கலன்களுக்கு கட்டாய சுங்க ஆய்வு தேவைப்பட்டது.

செம்மஞ்சள் என்று பெயரிடப்பட்டிருந்தால், அவை ஆய்வு செய்யப்பட வேண்டும், 'பச்சை' என்று பெயரிடப்பட்டிருந்தால், ஆய்வு இல்லாமல் அவற்றை வெளியேற்ற முடியும் என்று குழுவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இருப்பினும், சுங்க ஆய்வின்றி வெளியேற்றப்பட்ட 323 கொள்கலன்களில் ‘சிவப்பு’ என்று குறிக்கப்பட்டவையும் அடங்கியிருந்தன என்று குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri