வவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: ஒருவர் மரணம்
வவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று வெளியாகின.
அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்று காரணமாக சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இவர் கோவிட் தொடர்பான எந்தவித தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர் எனவும் மரணித்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 15 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri