இலங்கையில் ஒரே நாளில் 31 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் மேலும் 31 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும். இதன்படி, இலங்கையில் 923 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் 2263 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 138,065 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, 110108 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 27054 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.
மேலும், தற்போது வரையில் 1154795 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 243957 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




