விதுஷனின் உடலில் 31 காயங்கள்! பொலிஸார் செய்த கொலை அம்பலம் (Video)
எங்களது பிள்ளையை எம் கண்முன்னே அடித்து கொன்று விட்டு இன்று இந்த பொலிஸ் அதிகாரிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றார்கள் என மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விதுஷன் என்ற இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஊடகங்களிடம் தெரிவிக்கும்போதே விதுஷனின் பெற்றோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர், அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரி தான் செய்த ஒன்பதாவது குற்றச்செயல் இதுவென பகிரங்கமாக ஊர் முழுதும் கூறித் திரிவதாகவும் விதுஷனின் பெற்றோர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் விதுஷனின் உடலில் 31 காயங்கள் இருந்ததாகவும் உயிரிழந்த இளைஞனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.







உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
