ஏழு மாதங்களுக்குள் 31 அரசாங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது
கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் அரசாங்க அதிகாரிகள் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு ஆண்டின் தற்போது வரையான ஏழு மாத காலப்பகுதிக்குள் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கான விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் 44 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் மூலம் 31 அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் மட்டும் 2138 முறைப்பாடுகள்
கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை அதிபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உள்ளடங்கியுள்ளனர்.

இதற்கிடையே இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவுக்கு நடப்பு ஆண்டில் மட்டும் 2138 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri