சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்!
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேடும் பணி
தற்போது வரை மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சீன ஜனாதிபதி அந்நாட்டு அதிகாரிகள் உடனடியாக மாயமானவர்கள் தேடி மீட்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்நாட்டு பிரதமர் லி கியாங் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களின் புவியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் வேறுயிடங்களுக்கு மாற்றப்பட்டு மற்றொரு பேரிடர் தடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - இந்திரஜித்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
