கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய பெண்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19.04.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்டவர்கள், 25, 48 மற்றும் 50 வயதுடைய கொழும்பு, வெல்லம்பிட்டிய மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 5.248 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள், அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருள் தொகையுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
