பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகம்..
மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமை காரணமாக, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் அவசரத் தகவல்களை இலகுவாக முன்வைக்கும் வகையில், மூன்று வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வட்ஸ்அப் இலக்கங்கள்
அதன்படி, அனர்த்த முகாமைத்துவ மையம் நிலையத்தினால் 070 - 4117117, 078 - 4117117 மற்றும் 077- 4117117 ஆகிய வட்ஸ்அப் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், இந்த இலக்கங்கள் ஊடாகத் தமது அவசர நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்த தகவல்களை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்புகொண்டு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam