நாட்டில் நிலவும் அசாதாரண நிலை! பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக விசேட அவசர இலக்கங்கள் அறிவிப்பு..
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட கட்டணமில்லா தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அவசர இலக்கங்கள்
இதற்கமைய, தேசிய மகளிர் சபை மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் இலக்கங்களைத் தொடர்புகொள்ள முடியும்: பெண்கள் தொடர்பான தகவல்களுக்கு: 1938 (தேசிய மகளிர் சபையின் பெண்கள் உதவிச் சேவை)
சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு: 1929 (தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் உதவிச் சேவை) பொதுமக்கள் இந்தத் தொலைபேசி இலக்கங்களை எவ்வித கட்டணமுமின்றி தொடர்பு கொள்ள முடியும் எனவும், 24 மணித்தியாலங்களும் இயங்கும்.
இந்த சேவையின் ஊடாக தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்களை வழங்க முடியும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri