போதைப்பொருளுடன் 3 சந்தேக நபர்கள் கைது
சம்மாந்துறையில் 33 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை - சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழு வீட்டில் 22 போத்தல்களில் சூட்சுமமாக அடைத்து வைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்iத மீட்டுள்ளனர்.

அத்துடன் 25 வயது மதிக்கத்தக்க மலையடி கிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் 10 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைதானார்.
குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam