கற்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கிப் பரிதாப மரணம்!
கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(6.6.2026) இடம்பெற்றுள்ளது.
புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
நேற்று மாலை இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தழுவைக் கடற்கரைக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், வீசிய பலத்த காற்றுடன் கூடிய பாரிய கடல் அலையில் சிக்கி எதிர்பாராதவிதமாகக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற உறவினர்களும் பிரதேச மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதிலும், அவர்கள் மூவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri