யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு - சந்தேகநபர்கள் தலைமறைவு
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்லாய் பகுதியில் இன்று அதிகாலை (7) 230 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கஞ்சா பொதியினை வாகனத்தில் ஏற்றிவந்து மறைத்து வைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுரேஷ் சாலேவின் இறுதி உயில் மற்றும் சட்ட ஆவணங்கள்..! உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவசர கடிதம்
சந்தேகநபர்கள் தலைமறைவு
இந்த சோதனையின் போது 230 கிலோ கிராம் எடையுள்ள 102 கேரள கஞ்சா பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் மொத்த மதிப்பு ரூ. 36 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்ச பொதியினை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடி படையினர் வருவதாக தெரிந்து சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.