நுவரெலியாவில் முச்சக்கர வண்டி- வான் மோதி விபத்து! மூவர் காயம்
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு திரும்பும் காமினி தேசிய பாடசாலை சந்தி அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(7.6.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்களும் ஒரு பெண் அடங்களாக மூவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
பதுளை பிரதான வீதியிலிருந்து நுவரெலியா பிரதான நகர் நோக்கி பயணித்த வான் ஒன்றும் நுவரெலியா நகரில் இருந்து நானுஓயா நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri