யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: மீட்கப்பட்ட மது போத்தல்கள் - சிறுவர்கள் உட்பட மூவர் காயம்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து புதுவருட தினமான நேற்று (14.4.2024) இரவு 8.30 மணியளவில் சாவகச்சேரி - கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பொலிஸார் மேலதிக விசாரணை
சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த நபர், மகிழங்கேணிப் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளையில், பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் மதுப்போத்தல்கள் வீழ்ந்து கிடந்த நிலையில், சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
[QWNE0UP ]
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri