இலங்கையிலிருந்து படகு வழியாக தப்பித்து மூவர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து இன்று(28) அதிகாலை படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மன்னார், பேசாலையில் இருந்து படகு மூலம் மூன்று நபர்கள் இந்தியாவின் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தமிழகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தீவிர விசாரணை
இதையடுத்துத் தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதன்போது ஒருவர் முல்லைத்தீவு மாவட்டம், உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளனர் தகவலையடுத்துத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.





கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
