இந்தியா-அஹ்மதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட இறுதி உடல்
இந்தியா(India), அஹமதாபாத் விமான விபத்து இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகிய நிலையில், பலியானவர்கள் அனைவரினதும் உடல்கள், இன்று மரபணு சோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருவரின் உடல்
மருத்துவ அதிகாரிகள் முன்னதாக இறப்பு எண்ணிக்கையை 270 என குறிப்பிட்டிருந்தனர்.
2025, ஜூன் 12 ஆம் திகதி, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தின் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி வளாகத்தில் மோதியது.
இதில், விமானத்தில் இருந்த 241 பேரும், தரையில் இருந்த பலர் உயிரிழந்ததுடன் ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.
இதனையடுத்து, பலியானவர்களின் உடல்கள், டிஎன்ஏ என்ற மரபணு பரிசோதனையின் மூலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.
அதில் இறுதியாக, ஒருவரின் உடல் இன்று மரபணு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
